சைக்கோ ஜெய்சங்கர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
பெங்களூரு சிறையில் தற்கொலை செய்த ‘சைக்கோ‘ ஜெய்சங்கர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
எடப்பாடி,
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த கண்ணியாம்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் பெண்களை கற்பழித்து கொலை செய்த வழக்கில் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு ‘சைக்கோ‘ ஜெய்சங்கர் என்ற பெயரும் உண்டு.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு ஜெய்சங்கர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் கண்ணியாம்பட்டியில் உள்ள அவரது மனைவி பரமேஸ்வரிக்கும், உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் ஜெய்சங்கரின் உடலை பெற்று வர தங்களுக்கு பண வசதி இல்லை என்று கூறி, உடலை பெற்றுக்கொள்ள மறுத்தனர். இதனால் போலீசார், வருவாய்த்துறையினர் பரமேஸ்வரி குடியிருக்கும் வீட்டின் கதவில் ஜெய்சங்கரின் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசை ஒட்டினர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை பரமேஸ்வரி, அவரது தந்தை பழனிசாமி, ஜெய்சங்கரின் தாயார் பழனியம்மாள் ஆகியோர் தனிவாகனத்தில் பெங்களூரு சென்றனர். அதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு ஜெய்சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதைத்தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஜெய்சங்கர் உடல் இரவு கண்ணியாம்பட்டி பனங்காட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஜெய்சங்கரின் உடலை பார்த்து அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து பனங்காடு மயானத்தில் ஜெய்சங்கரின் உடல் இறுதிசடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story