தீக்குண்டத்தில் குழந்தைக்கு பால் கொடுத்த பெண்
எடப்பாடி அருகே சவுரிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீக்குண்டத்தில் குழந்தைக்கு பெண் பக்தர்கள் ஒருவர் பால் கொடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.
எடப்பாடி,
எடப்பாடி அருகே உள்ள சவுரிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மகாசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து யாக குண்டத்தில், தீவார்க்கப்பட்டு கோவில் முன்பு வெட்டப்பட்டு இருந்த 60 அடி நீள குண்டத்தில் தீப்பற்ற வைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை கரகம் ஆற்றுக்கு சென்று பூங்கரகம் ஜோடித்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோவில் நிர்வாகிகள், காணியாசிக்காரர்கள் முன்னிலையில் பூங்கரகம், அக்னி கரகத்துடன் தீ மிதித்து தீமிதி விழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
அப்போது ஒரு பெண் தீக்குண்டத்தின் நடுவில் முக்காலியில் அமர்ந்து குழந்தைக்கு சங்கு மூலம் பாலை கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ஒரு பெண் அலகு குத்தி தீ மிதித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தீக்குண்டத்தில் நடுவில் அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டது குறித்து பக்தர்கள் கூறும் போது, குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை பிறந்தால், தீக்குண்டத்தின் நடுவே உட்கார்ந்து பால் கொடுப்பது என்று வேண்டிக்கொள்வார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும், இவ்வாறு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள் என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story