மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா


மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா
x
தினத்தந்தி 3 March 2018 4:15 AM IST (Updated: 3 March 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வருகிற 12-ந் தேதி மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். மேலும் அவர் வேலைக்கு செல்லும் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கி பேசுகிறார்.

மேலும் இந்த விழாவில் சேலம் மாவட்டத்தில் அரசு துறைகளின் மூலம் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 2,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ரோகிணி தலைமையில் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் ரோகிணி நேற்று காலை சோனா பொறியியல் கல்லூரிக்கு சென்று விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, பன்னீர்செல்வம் எம்.பி., ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story