அதிகாரிகளை அழைக்காமல் அரசு காப்பகத்துக்கு திடீரென சென்ற கலெக்டர்
குறைகளை கண்டறிய அதிகாரிகளை அழைக்காமல் அரசு காப்பகத்துக்கு திடீரென சென்ற கலெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கேள்விகள் கேட்டு மாணவிகளின் கல்வித்திறனையும் பரிசோதித்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் வடநேரே பொறுப்பேற்றார். குமரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதிலும், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதிலும் முனைப்புக்காட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அதிகாரிகளிடம் பேசிய கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அரசு குழந்தைகள் காப்பகம் நாகர்கோவிலில் எங்கு இருக்கிறது? என்று கேட்டார். உடனே அதிகாரிகள், நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் சத்தியா அம்மையார் அரசு பெண் குழந்தைகள் காப்பகம் இருப்பதாக கூறினர். இதனையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அதிகாரிகள் யாரையும் துணைக்கு அழைக்காமல் தனது உதவியாளர்களை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த குழந்தைகள் காப்பகத்துக்கு காரில் திடீரென சென்றார்.
கலெக்டர் திடீரென வந்ததைப்பார்த்ததும் அந்த காப்பகத்தில் இருந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட அவர்கள் கலெக்டரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அது பெண் குழந்தைகளுக்கான காப்பகம் ஆகும். பின்னர் அந்த காப்பக பணியாளர்களிடம் இந்த காப்பகத்தில் எத்தனை பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற விவரத்தை கேட்டறிந்தார். அப்போது பெற்றோரை இழந்தவர்கள், படிக்க வாய்ப்பு-வசதி இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் என 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவிகள் 54 பேர் இந்த காப்பகத்தில் தங்கி படிப்பதாகவும், அவர்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவிகள் சுமார் 15 பேருக்கு இந்த காப்பகத்திலேயே ஒரு ஆசிரியை மூலம் பாடம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர் அந்த காப்பகத்தில் ஆய்வுப்பணியை தொடங்கினார். அந்த சமயத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அந்த காப்பகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இதை கலெக்டர் ஓரமாக நின்று கவனித்தார். பின்னர் அந்த மாணவிகளின் கல்வித்தரத்தை பரிசோதிப்பதற்காக மாணவிகள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசிக்கச் சொல்லி கேள்விகளும் கேட்டார். மாணவிகளும், கலெக் டர் முன்னிலையில் பாடங் களை வாசித்துக் காட்டினர்.
பின்னர் மாணவிகளிடம் அவர் பேசும்போது, “நீங்கள் கல்வி கற்க போதுமான வசதிகள் இந்த காப்பகத்தில் இருக்கிறதா? உங்களுக்கு ஆசிரியை நடத்தும் பாடம் புரிகிறதா? ஆசிரியை நன்றாக பாடம் சொல்லித் தருகிறாரா? காப்பகத்தில் உணவு சரியாக வழங்கப்படுகிறதா? படுக்கை வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போதிய அளவு உள்ளதா?“ என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அவர், ‘எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் உங்களுக்கு பிடித்தமான துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் கல்வி நன்றாக கற்க வேண்டும். உங்களுக்கு இங்கு ஏதாவது குறைகள் இருந்தால் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுப்பேன்‘ என்றார்.
அதன்பிறகு காப்பகத்தில் மாணவிகள் தங்கும் அறைகள், உணவு தயாரிக்கும் சமையலறை, கழிப்பறை போன்றவற்றையும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். குறைகளை கண்டறிய அதிகாரிகளை அழைக்காமல் அரசு காப்பகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே திடீரென ஆய்வு செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. கலெக்டரின் திடீர் ஆய்வுக்கு அப்பகுதியை சேர்ந்த மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Tags :
Next Story