கீரனூர் அருகே குளத்தூரில் நாளை ஜல்லிக்கட்டு


கீரனூர் அருகே குளத்தூரில் நாளை ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே குளத்தூரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கீரனூர், மார்ச்.3-

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே குளத்தூரில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திரு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைக்கும் பணி, தேங்காய் நார்கள் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு, விழாக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தநிலையில் இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக முன்பதிவு நடந்து வருகிறது. மாடுபிடிவீரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டையுடனும், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் புகைப்படம், மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றுடனும் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் கலந்து கொள்ள 400-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், 290-க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

Next Story