ஏலாக்குறிச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,386 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஏலாக்குறிச்சியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,386 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சியில் மது விலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சண்முகநாதன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏலாக்குறிச்சி கடைவீதியில் மது விற்றுக்கொண்டிருந்த ஏலாக்குறிச்சியை சேர்ந்த சிவக்குமார்(வயது 39), கார்த்திக்(30) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள், வெளிமாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, ஏலாக்குறிச்சி அருகே செட்டிகுழியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த வீட்டில் 118 அட்டை பெட்டிகளில் இருந்த 5,386 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story