கழுகுகள் கிராமம்..!
அமெரிக்காவின் தேசியப் பறவையான வெண்தலை கழுகுகளை, பெரும்பாலான அமெரிக்கர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அலாஸ்காவிலுள்ள அனலாஸ்கா தீவில் மட்டுமே வெண்தலை கழுகுகள் அதிகமாக உயிர்வாழ்கின்றன. அங்கே 4,700 மக்களுடன், அழகான 600 வெண்தலை கழுகுகளும் வசித்துவருகின்றன. இங்குள்ள மக்கள் கழுகுகளை மற்றவர்களைப்போல அழகாகவும், ஆச்சரியமாகவும் கண்டுகளிப்பதில்லை. ஏனென்றால் வெண்தலை கழுகுகள், அனலாஸ்கா தீவு மக்களை அடிக்கடி அச்சுறுத்துமாம். அமெரிக்காவிலேயே கழுகுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தத் தீவுவாசிகள் தான்.
வெண்தலை கழுகுகள் பெரும்பாலும் உயரமான மரங்களில் கூடுகளைக் கட்டக்கூடியவை. ஆனால் அனலாஸ்கா தீவில் மரங்கள் அதிகம் இல்லை என்பதால் வீடுகள், கட்டிடங்கள், கப்பல்கள், இயந்திரங்கள் போன்றவற்றில் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. இவை மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பதால் கழுகிற்கும், மக்களுக்கும் இடையே பிரச்சினைகள் உருவாகின்றன. மக்கள் வீட்டிலிருந்து சாதாரணமாக வெளியே வந்தாலும், தங்களின் கூடுகளுக்கு ஆபத்து என்று நினைத்துக்கொண்டு, அவர்களைக் கழுகுகள் ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. அதனால் தீவு முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கழுகுகள் இருப்பதை மறந்துவிட்டு, அந்த இடங்களில் நுழைந்துவிட்டால், அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது. கழுகுகளால் தாக்கப்படும் 10 மனிதர்களில் 6 பேருக்குத் தீவிரமான சிகிச்சை தேவைப்படுகிறதாம்.
“ஆண்டு முழுவதுமே கழுகுகளால் எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் அடை காக்கும் காலமான கோடையில் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம். அனலாஸ்கா தீவு 80 மைல் நீளம் கொண்டது. இதில் மனிதர்கள் வசிக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கழுகுகள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால், கழுகுகளுக்கு உணவுப் பிரச்சினை ஏற்படுவதில்லை. படகுகள் மீன்களைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததும், கழுகுகள் தங்களுக்குத் தேவையான இரையை எடுத்துக்கொள்கின்றன. பெரும்பாலான அனலாஸ்கா மக்கள் கழுகுகளை நேசிக்கவே செய்கிறார் கள். சிலர் புறாக்களைப்போல் கழுகுகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புறா மனிதர்களைக் கண்டதும் பறந்துவிடும், ஆனால் இந்தக் கழுகுகள் சிறிதும் மனிதர்களுக்குப் பயப்படுவதில்லை. அதிலும் இங்கிருக்கும் தபால் நிலையத்தில் தான் அதிக அளவில் கழுகுகள் கூடுகளைக் கட்டியிருக்கின்றன. தலைக்கவசம், தோல் ஆடைகள் இன்றி தபால் நிலையத்துக்குள் செல்பவர்களை, நிச்சயம் மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்குக் கழுகுகளின் தாக்குதல் ஆக்ரோஷமாக இருக்கும். இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தந்திக் கம்பங்கள், வீடுகளின் கூரைகள், வாகனங்களில் அமர்ந்திருக்கும் கழுகுகளைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு கழுகால் தாக்கப்படும்போது தான் இங்குள்ள பிரச்சினை களைப் புரிந்துகொள்கிறார்கள்” என்கிறார் காவல்துறை அதிகாரி ஜெனிபர் ஷாக்லே.

Related Tags :
Next Story