கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,400 கோடி நிலுவைத்தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்


கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,400 கோடி நிலுவைத்தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 11:51 PM IST)
t-max-icont-min-icon

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,400 கோடி நிலுவைத்தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின்மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,400 கோடியை அரசு உடனே வழங்க வேண்டும், நெல்லுக்கு அரசு அறிவித்த விலையை உயர்த்தி வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை கிராமப்புறங்களில் அமல்படுத்துவதுடன், பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தி மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனி, தலைவர் அர்ஜூனன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் துரைசிவா நன்றி கூறினார்.

Next Story