பாளையங்கோட்டையில் பரபரப்பு: கல்லூரி முன்பு தந்தையுடன் பேராசிரியர் தற்கொலை
நெல்லை பாளையங்கோட்டையில் கல்லூரி முன்பு விஷம் குடித்து தந்தையுடன் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை,

கல்லூரி பேராசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி காமராஜ் தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 55). இவருடைய மனைவி முத்துரோஸ்மேரி. இவர்களுக்கு கீர்த்தி ஆசீர் (29) என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். இஸ்ரவேல், பாளையங்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கீர்த்தி ஆசீர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒருவர் சென்னையிலும், ஒருவர் பாளையங்கோட்டையிலும் வசித்து வருகின்றனர்.
கீர்த்தி ஆசீருக்கும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. சுகன்யா, சேரன்மாதேவியில் உள்ள மனோ கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதி பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் சேவியர் காலனியில் குடியேறினர்.
போலீசில் புகார்
திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்வில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே சுகன்யா, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் மனு கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிரந்தர பணிக்கு நேர்முக தேர்வு
இந்த நிலையில் கீர்த்தி ஆசீருக்கு நிரந்தர பணிக்கான நேர்முக தேர்வு நாளை (திங்கட்கிழமை), அவர் பணிபுரியும் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. கீர்த்தி ஆசீரை கல்லூரிக்கு வரும்படி நேற்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இதனை ஏற்று பேராசிரியர், தனது தாய்- தந்தையுடன் நேற்று காலை 9 மணி அளவில் கல்லூரிக்கு சென்றார். அப்போது, உங்கள் குடும்ப பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தோம். அந்த பிரச்சினையை முடித்து விட்டு வாருங்கள். அப்போதுதான் நிரந்தர பணி குறித்து பேச முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.
தந்தையுடன் விஷம் குடித்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் தனது பெற்றோருடன் கல்லூரி வளாகத்தில் சோகத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அதன்பிறகு தாயை மட்டும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சகோதரி வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு கீர்த்தி ஆசீர் மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது விஷம் வாங்கி வந்ததாக தெரிகிறது.
மதியம் 2 மணி அளவில் கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த தந்தையும், அவரும் நிரந்தர பணி கிடைக்காது என்று நினைத்து விஷம் குடித்து விட்டனர். சிறிது நேரத்தில் இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் சாவு
அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் மாலை கீர்த்தி ஆசீரும், அவரது தந்தை இஸ்ரவேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த கீர்த்தி ஆசீரின் தாய், தங்கை மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. மேலும், கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உறவினர்கள் புகார்
தற்கொலை தொடர்பாக பேராசிரியர் உறவினர்கள் கூறுகையில், குடும்ப பிரச்சினையை முடித்து விட்டு வந்தால்தான் நிரந்தர பணி தர முடியும் என்று பேராசிரியர் கீர்த்தி ஆசீர், அவருடைய தந்தையிடம் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் மனம் உடைந்த அவர்கள் கல்லூரி முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து விட்டனர். இதுதொடர்பாக போலீசார் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.
கல்லூரி நிர்வாகம் மறுப்பு
தற்கொலை குறித்து கீர்த்தி ஆசீர் பணிபுரியும் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கல்லூரி நிரந்தர பேராசிரியர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து 200 முதல் 300-க்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள். கீர்த்தி ஆசீர் அவருடைய தந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது அவர்களது தனிப்பட்ட குடும்ப பிரச்சினையில்தான். பணி நிரந்தரத்துக்கும், அவர்களது தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருவரும் விஷம் குடித்து கல்லூரி வாசலில் மயங்கி கிடந்தனர். நாங்கள் அவர்களை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் என்றார்.
கல்லூரி பேராசிரியர் தனது தந்தையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story