இரு தரப்பினர் இடையே மோதல்; 2 பேர் படுகாயம் 5 பேர் மீது வழக்குப்பதிவு
கூத்தாநல்லூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூர், ராமானுஜ மணலி தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் இளவரசன்(வயது 29). இவர் கூத்தாநல்லூரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(33). கார் டிரைவர். இளவரசனுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கல்யாணசுந்தரத்தின் மகள், இளவரசனின் செல்போனை வாங்கி கல்யாணசுந்தரத்திடமே பேசினார். தன் மகள் தன்னிடம் பேசியது இளவரசனின் செல்போன் என்பதை அறிந்த கல்யாணசுந்தரம் இளவரசனிடம் சென்று என் மகளிடம் எதற்கு உன் செல்போனை கொடுத்தாய்? என்று கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இளவரசனுக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் நடராஜன், ஜீவா ஆகியோரும், கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக அவரது தந்தை கோவிந்தசாமியும் சேர்ந்து கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இந்த மோதலில் இளவரசன் மற்றும் கல்யாணசுந்தரத்தின் மனைவி ராணி(39) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இளவரசன் மற்றும் ராணி ஆகியோர் தனித்தனியே கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கல்யாணசுந்தரம், அவருடைய தந்தை கோவிந்தசாமி, இளவரசன், அவரது உறவினர்கள் நடராஜன், ஜீவா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story