மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி


மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 4 March 2018 2:30 AM IST (Updated: 4 March 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

மினி மாரத்தான் போட்டி


உலக மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில், ‘பெண்களை போற்றுங்கள், பெண்மைக்கு மதிப்பளியுங்கள்‘ என்ற தலைப்பில் பெண்கள் மட்டும் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி ஜே.சி.ஐ. பியர்ல்சிட்டி ஜே.சி. ரெட் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டி நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கியது. போட்டியை தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன இணை தலைவர் சுமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பரிசுகள்

இதைத்தொடர்ந்து மராத்தான் போட்டியில் பங்கேற்ற பெண்கள் அங்கிருந்து ஓடினர். தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு வழியாக கடற்கரை சாலையில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையம் அருகில் சென்று, பின்னர் அங்கிருந்து திரும்பி கடற்கரை சாலை வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தனர்.

இந்த போட்டியில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்கமுத்துமாரி, ஜெயமாலினி ஆகியோர் முறையே முதல் 2 இடங்களையும், காட்டுநாயக்கன் பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி ஜெயபாரதி 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது.

Next Story