மோட்டார் சைக்கிள் மோதி கிராம உதவியாளர் பலி 2 பேர் படுகாயம்
பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கிராம உதவியாளர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாப நாசம் தாலுகா இடையிருப்பு கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிராமலிங்கம்(வயது 57). இவர் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர், நேற்று காலை அதே ஊரைச்சேர்ந்த தனது நண்பர் வெங்கடேசனுடன் (34), மோட்டார் சைக்கிளில் திருக்கருக்காவூர் கடை வீதிக்கு வந்து ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை வெங்கடேசன் ஓட்டினார்.
அப்போது பின்னால் ஒத்தப்பத்தி கிராமத்தை சேர்ந்த வெற்றி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஜோதிராமலிங்கம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ஜோதிராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
2 பேர் படுகாயம்
இந்த விபத்தில் வெங்கடேசன் மற்றும் வெற்றி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜோதி ராமலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story