கோத்தகிரி அருகே தோட்டத்தின் முள்வேலி கம்பியில் சிக்கித் தவித்த கரடி
கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தின் முள்வேலி கம்பியில் கரடி சிக்கித்தவித்தது. வனத்துறை யினர் 3 மணி நேரம் போராடி கரடியை விடுவித்தனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு பெரியார்நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. அங்குள்ள தேயிலை தோட்டத்தை சுற்றி முள்வேலி கம்பி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று அதிகாலை அந்த தோட்டத்துக்குள் கரடி ஒன்று வந்தது. அந்த கரடி, தோட்டத்துக்குள் சுற்றித்திரிந்து விட்டு வெளியே செல்ல முயன்றது.
அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த முள்வேலியில் கரடியின் முடி சிக்கிக் கொண் டது. அதில் இருந்து விடுபட கரடி போராடியது. ஆனால் அதனால் விடுபட முடியவில்லை. இதனால் அந்த கரடி வலி தாங்க முடியாமல் சத்தமிட்டது. இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்த னர். அங்கு முள்வேலி கம்பியில் கரடியின் முடி சிக்கி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனக் காப்பாளர்கள் முருகன், வீரமணி, தருமன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், கோத்தகிரி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்களும் கூடினர்.
இதையடுத்து முள்வேலி கம்பியில் சிக்கிய கரடியை மீட்க வனத்துறையினர் முயற்சி எடுத்தனர். இதற்காக அவர்கள் அருகே சென்ற போது கரடி அங்கும், இங்கும் ஓட முயற்சித்ததால் வலியால் துடித்தது. இதனால் கரடி அங்கும் இங்கும் நகர முடியாதபடி வனத்துறை யினர் பெரியகட்டைகளால் அழுத்தி பிடித்தனர். இதன் காரணமாக கரடி அந்த இடத்திலேயே அப்படியே அமர்ந்தது.
உடனே, முள்வேலி கம்பியில் சிக்கி இருந்த கரடியின் முடியை வனத்துறையினர் கத்திரிக்கோலால் வெட்டினர். சிக்கலில் இருந்து விடுபட்டதும் கரடி துள்ளிக்குதித்தபடி அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கி ஓடி தப்பியது.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். முள்வேலி கம்பியில் சிக்கித்தவித்த கரடியை வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story