நெல்லை அருகே கோழி அருள் உள்பட 2 பேர் கைது


நெல்லை அருகே கோழி அருள் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 March 2018 2:15 AM IST (Updated: 4 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கோழி அருள் உள்பட 2 பேரை போலீசார் திடீரென்று கைது செய்துள்ளனர்.

நெல்லை,

நெல்லையில் கோழி அருள் உள்பட 2 பேரை போலீசார் திடீரென்று கைது செய்துள்ளனர்.

2 பேர் கைது


நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த இடைகால் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 50), விவசாயி. இவர் நேற்று முன்தினம் பாப்பாக்குடி அருகே சென்ற போது 2 பேர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1,500 பறித்துச் சென்று விட்டனர். இதுதொடர்பாக ஆதிமூலம் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பங்களா சுரண்டையை சேர்ந்த ஜெயக்குமார் என்ற கோழி அருள் (45) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த சகாயராஜ் (31) ஆகிய 2 பேரும் அரிவாளுடன் அந்த பகுதியில் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கோழி அருள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் ராக்கெட் ராஜாவின் கூட்டாளியாகவும் கருதப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இவர்கள் வேறு ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபடுவதற்காக அரிவாளுடன் சுற்றித்திரிந்தார்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே போலீசார் கைது செய்ய முயன்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த கோழி அருள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story