வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக வன உயிரின நாள் கொண்டாட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக வன உயிரின நாள் கொண்டாடப்பட்டது.
வண்டலூர்,
2014-ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் மார்ச் 3-ந் தேதி உலக வன உயிரின நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பூனையினங்களில் சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் தென்அமெரிக்க சிறுத்தை ஆகிய 4 மட்டுமே பெரும்பான்மை மக்களால் அறியப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 4 பெரும் பூனையினங்களை பாதுகாத்து வருகிறது. அவை வங்கப்புலி, ஆசிய சிங்கம், தென் அமெரிக்க சிறுத்தை மற்றும் சிறுத்தைகளாகும். இவற்றில் வங்கப்புலி, வெள்ளைப்புலி முக்கியத்துவமானது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிகப்பெரிய இப்பூங்கா பெரும்பாலான பெரும் பூனையினங்களை பராமரித்து வருவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு பெரும் பூனைகளின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு மூலம் போதித்து அவ்வினங்களை அழிவிலிருந்து காக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
உலக வன உயிரின நாளை முன்னிட்டு நேற்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பெரும்பான்மையாக வருகை தந்த அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் வார விடுமுறையில் வருகைதரும் பார்வையாளர்களுக்கும் பெரும் பூனைகள் பாதுகாப்பது பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும், உணவுச்சங்கிலி, உணவுப்பிரமிடு ஆகியவற்றை எடுத்துக்கூறி புலிகள் மற்றும் பிற மாமிச உண்ணிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு புகட்டப்பட்டது.
வன உயிரினங்கள் குறித்து கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story