மதுரையில் மதுபோதையில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது


மதுரையில் மதுபோதையில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 4 March 2018 3:00 AM IST (Updated: 4 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மதுபோதையில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் போலிசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை பனகல் சாலை வழியாக அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் மருத்துவக்கல்லூரி அருகே நின்ற போது சிலைமான் புளியங்குளத்தை சேர்ந்த சம்சுதீன்( வயது44) பஸ்சில் ஏறினார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டும் என்று கூறி பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர் பஸ் அந்த வழியாக செல்லாது என்று கூறி பஸ்சில் இருந்து இறங்குமாறு கூறினார். ஆனால் சம்சுதீன் கண்டக்டரிடம் தகராறு செய்து, அவரை தாக்கி, டிக்கெட் எந்திரத்தை சேதப்படுத்தினார். அவரை பஸ்சில் இருந்தவர்கள் பிடித்து தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சுதீனை கைது செய்தனர்.

Next Story