குழந்தை பாக்கியம் இல்லாததால் பெண் தீக்குளித்து தற்கொலை
காங்கேயநல்லூரில் குழந்தை பாக்கியம் இல்லாததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்,
காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்தவர் குமார் (வயது 52). இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி திலகவதி (45). இவர்கள் இருவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் திலகவதி மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது திலகவதி மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வலி தாங்காமல் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதில் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனம் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அவர், மருத்துவமனைக்கு சென்று திலகவதியிடம் வாக்குமூலம் பெற்றார். அதில், திலகவதி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் மனவேதனையில் தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி திலகவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story