ஆலங்குப்பத்தில் ஏரி, குளங்களை கவர்னர் கிரண்பெடி ஆய்வு: 3 இடங்களில் பொது கழிப்பறைகள் கட்ட உத்தரவு
ஆலங்குப்பம் கிராமத்தில் ஏரி, குளங்களை கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் 3 இடங்களில் பொதுகழிவறைகள் கட்ட உத்தரவிட்டார்.
காலாப்பட்டு,
புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். பிரதமர் மோடியின் வருகையையொட்டி கடந்த 2 வாரங்களாக இந்த பணிகளை கிரண்பெடி தள்ளிவைத்தார்.
இந்தநிலையில் நேற்று காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பம் கிராமத்தில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 2 குளங்களை பார்வையிட்டார். இந்த குளங்களை சுற்றி கரையை பலப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வனத்துறை சார்பில் கரையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் அங்குள்ள ஏரிக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்கு குப்பைகள் குவிந்து கிடந்ததையும், அந்த பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதையும் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேசிடம், இந்த பகுதி மக்களுக்கு தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் ஏன் நிதி வழங்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் ஏன் வீடுகளில் கழிவறை கட்டவில்லை? என்று கேட்டார். இதனை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி, வீடுதோறும் கழிவறை கட்டும் வரை 3 இடங்களில் பொது கழிவறைகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். அதனை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர் ஏரியின் வரைபடத்தை வாங்கி பார்வையிட்ட கவர்னர், ஏரியை சீரமைத்து படகு குழாம் அமைக்க வேண்டும். கரையை பலப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். வனத்துறையின் மூலம் மரக்கன்றுகள் நடுவதுடன் படகு குழாம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து அவர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். இந்த ஆய்வின் போது கவர்னர் மாளிகை அதிகாரிகள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story