ஓட்டல் ஊழியர்-வாலிபரை கடத்தி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர் உள்பட 4 பேர் கைது
ஓட்டல் ஊழியர் மற்றும் வாலிபரை கடத்தி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியின் போட்டியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
ஓட்டல் ஊழியர் மற்றும் வாலிபரை கடத்தி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியின் போட்டியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஓட்டல் ஊழியர் கடத்தல்
பெங்களூரு ஞானபாரதி, தொட்டபஸ்தி மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிரீஸ். இவரை கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி மர்மநபர்கள் சிலர் காரில் கடத்தி சென்று உளிமாவு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்து அடித்து, உதைத்து தாக்கினார்கள். அன்றைய தினம் கிரீஸ் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு ஒரு பெண்ணுடன் வந்து சாப்பிட்ட நபர் பற்றியும், அந்த பெண் பற்றியும் மர்மநபர்கள் கிரீசிடம் கேட்டனர்.
அவரும் 2 பேரையும் தெரியும் என்றும், தவுசித் என்ற வாலிபர் தான் பெண்ணுடன் வந்ததாகவும் மர்மநபர்களிடம் கிரீஸ் கூறினார். அதன் பிறகு, தவுசித்தின் செல் போனுக்கு கிரீசை தொடர்பு கொண்டு பேசி, கொரகுன்டே பாளையாவுக்கு வரும்படி கூறுமாறு மர்மநபர்கள் கூறினார்கள்.
துப்பாக்கி முனையில் மிரட்டல்
அதன்படி, தவுசித்துடன் கிரீஸ் பேசி, கொரகுன்டே பாளையாவுக்கு அவரை வர சொன்னார். அங்கு வந்த தவுசித்தையும் மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று கத்தியால் கீறியுள்ளனர். பின்னர் துப்பாக்கியை காட்டிய மர்மநபர்கள் 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்களை பிப்ரவரி 28-ந் தேதி விடுவித்தனர்.
மேலும் கிரீசிடம் இருந்த ரூ.10 ஆயிரம், தவுசித்திடம் இருந்த செல்போனையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டனர். மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கிரீஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியின் போட்டியாளர்
பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் கிரீஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். இந்த நிலையில், கிரீஸ் மற்றும் தவுசித்தை கடத்தி சென்று துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கிட்டி என்கிற சுனாமி கிட்டி என்கிற பிரதீப், அவரது நண்பர்கள் அர்ஜூன், சந்தோஷ், யோகேஷ் ஆகிய 4 பேரையும் ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் கிட்டி, கன்னட தொலைக்காட்சி சார்பில் நடைபெற்று வரும் ‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தோல்வி அடைந்தவர் ஆவார். ஆனாலும் ‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சி மூலம் கிட்டி பிரபலமாகி இருந்தார். பின்னர் கைதான 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
பெண்ணுடன் நெருங்கி பழகியதால்...
அதாவது கிட்டியின் நண்பர் சுனில். சுனிலின் மனைவியுடன் ஒருவர் நெருங்கி பழகியுள்ளார். இதுபற்றி கிட்டியிடம் சுனில் தெரிவித்துள்ளார். பின்னர் சுனிலின் மனைவியுடன் நெருங்கி பழகும் நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க சுனிலும், கிட்டியும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அப்போது தான் கிரீஸ் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சுனிலின் மனைவியும், அந்த நபரும் வந்து சாப்பிட்டு விட்டு சென்றது கிட்டிக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கிட்டி, சுனில், அவர்களது நண்பர்கள் உள்பட 11 பேர் சேர்ந்து முதலில் கிரீசை கடத்தி சென்று அடித்து தாக்கியுள்ளனர். அப்போது சுனில் மனைவியின் புகைப்படத்தை காட்டி, அவருடன் வந்தது யார் என்று கேட்டபோது தான் தவுசித் என்பவர் வந்திருந்தது சுனிலுக்கும், கிட்டிக்கும் தெரிய வந்தது.
7 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து, கிரீஸ் மூலமாகவே கொரகுன்டே பாளையாவுக்கு தவுசித்தை வரவழைத்து 2 பேரையும் அடித்து உதைத்ததுடன், கத்தியாலும் கீறியுள்ளனர். மேலும் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் தவுசித்தை சுனில் மனைவியுடன் நெருங்கி பழகக்கூடாது என்று மிரட்டி, அவரை கிட்டி அனுப்பி வைத்தது தெரியவந்தது. சுனில் மனைவியுடன் தவுசித் நெருங்கி பழகியதால், அவரும், கிரீசும் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடம் இருந்து துப்பாக்கி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் உள்பட 7 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை ஞானபாரதி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தாக்குதலுக்கு உள்ளான தவுசித் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story