கர்நாடக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் சித்தராமையா பேச்சு
கர்நாடக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.
30 சதவீத சம்பள உயர்வு
கர்நாடக அரசு ஊழியர்கள் மாநாடு பெங்களூரு அரண்மனையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதிய குழு வழங்கிய பரிந்துரையை அப்படியே ஏற்று 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளேன். நான் அரசு ஊழியர்களுக்கு எதிரானவன் என்ற ஒரு கருத்து பரப்பப்படுகிறது. இது தவறு. அரசு ஊழியங்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரை போல் ஆவார்கள். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
சேவையாற்ற வாய்ப்பு
அரசு ஊழியர்கள் அரசின் தூதர்களை போல் செயல்படுபவர்கள். அரசின் கொள்கை, திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென்றால், அது மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே சாத்தியம் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சேர்ந்து செயல்பட்டால் தான் இலக்கை அடைய முடியும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.
இது உங்களுடைய, எங்களுடைய அரசு. மக்கள் எங்களுக்கு ஓட்டுப்போட்டு சேவையாற்ற அனுப்பி இருக்கிறார்கள். அரசு வேலை மூலம் உங்களுக்கு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய புண்ணிய வேலையை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஊதிய குழு பரிந்துரையின்படி உங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளோம். ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்தப்படுமா? என்பதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்
அரசு ஊழியர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். எல்லா துறைகளிலும் கருப்பு ஆடுகள் இருக்கின்றன. அதை சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது. மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசு, சட்டசபை மற்றும் நீதித் துறைக்கு உள்ளது.
அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன் சமுதாயத்தின் கடைகோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும். கர்நாடக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட உங்களின் கோரிக்கைகள் 6-வது ஊதிய குழு பரிந்துரையில் சேர்க்குமாறு கூறுவேன். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Tags :
Next Story