வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி: கர்நாடகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் எடியூரப்பா அறிக்கை


வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி: கர்நாடகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் எடியூரப்பா அறிக்கை
x
தினத்தந்தி 4 March 2018 3:00 AM IST (Updated: 4 March 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதால், கர்நாடகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதால், கர்நாடகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி


வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக திரிபுராவில் ஊழல் மற்றும் பிரிவினை ஏற்படுத்தும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை மக்கள் புறக்கணித்து உள்ளனர். பிரதமர் மோடியின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தல் வெற்றி கர்நாடகத்திலும் எதிரொலிக்கும். கர்நாடகத்திலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இங்குள்ள காங்கிரஸ் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. சாதிகள் அடிப்படையில் மக்களை பிரிக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றியால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இது 150 தொகுதிகளில் வெற்றி என்ற எங்களின் இலக்கை அடைவோம்.

மிகப்பெரிய வெற்றி


இந்த வெற்றிக்காக பிரதமர் மோடி மற்றும் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். வடகிழக்கு மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றியால் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி விரைவில் கைகூடும். இந்த இலக்கை அடைய கர்நாடக பா.ஜனதா தீவிரமாக பணியாற்றும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், “வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு பலம் இல்லை. ஆயினும் அங்கு எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் வளர்ச்சிக்காக பா.ஜனதா கட்சியை ஆதரித்து உள்ளனர். இந்த வெற்றி கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்“ என்றார்.

Next Story