கோரேகாவில் அடுக்குமாடி கட்டிட இடைவெளியில் விழுந்து கிடந்த சிறுவன் உயிருடன் மீட்பு
கோரேகாவில், ஹோலி கொண்டாட்டத்தின் போது அடுக்குமாடி கட்டிடத்தின் நடுவில் உள்ள குறுகலான இடைவெளியில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
மும்பை,

சிறுவன் மாயம்
மும்பை, கோரேகாவ் கிழக்கு பகுதியில் 55 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருபவர் விஷால். தொழில் அதிபர். இவரது மகன் திருஷ்யா (வயது10). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை சிறுவன் திருஷ்யா கட்டிட மாடியில் நண்பர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டான். இந்தநிலையில் திடீரென திருஷ்யா மாயமானான். வெகுநேரமாகியும் சிறுவன் திரும்பி வரவில்லை.
எனவே அவனது நண்பர்கள் இது குறித்து பெற்றோரிடம் கூறினர். பெற்றோரும் கட்டிடம் முழுவதும் சிறுவனை தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மீட்பு
எனவே அவர்கள் இதுகுறித்து தின்டோஷி போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் சிறுவனை கட்டிடம் முழுவதும் தேடிப்பார்த்தனர். இந்தநிலையில் சிறுவன் கட்டிடத்தின் நடுவில் உள்ள குறுகலான இடைவெளியில் 40 அடி ஆழத்தில் விழுந்து சிக்கி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் குழாயில் இருந்து சிறுவனை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவனது உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தன. அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் கோரேகாவ் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story