தவறான சிகிச்சையால் பெண் பலி: குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்து உள்ளது.
மும்பை,

தவறான சிகிச்சை
மும்பை குர்லா பகுதியில் மாநகராட்சியால் நடத்தப்படும் பாபா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி அந்த மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல், டைபாய்டு போன்ற வியாதிகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களுக்கு வழக்கமாக செலுத்தப்படும் ஆன்டி-பயாட்டிக் மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால் இந்த மருந்தை செலுத்தியதும் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 28 பெண்களுக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வேறு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டனர். எனினும் அவர்களில் சய்ரா சாயிக் என்ற 47 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நடவடிக்கை என்ன?
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கவாய் மற்றும் பாரதி தாங்ரே அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதிலளிக்குமாறு மாநகராட்சி மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story