பெண் குரலில் பேசி ஆசிரியரிடம் ரூ.3 லட்சம் மோசடி குஜராத் வாலிபர் கைது
பெண் குரலில் பேசி ஆசிரியரிடம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

ரூ.3 லட்சம் அனுப்பினார்
மும்பை, அந்தேரி பகுதியில் 32 வயது டியூசன் ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடிவந்தார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த பெண், டியூசன் ஆசிரியரை திருமணம் செய்ய சம்மதித்தார்.
இந்தநிலையில் ஒருநாள் அந்த பெண் தனது தாயின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுவதாக கூறினார். இதை உண்மையென நம்பிய டியூசன் ஆசிரியரும் அந்த பெண் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.3 லட்சம் அனுப்பினார். அதன் பிறகு ஆசிரியரால், அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
வாலிபர் கைது
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர், இது குறித்து அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த விஷால்(வயது25) என்ற வாலிபர் தான் பெண் குரலில் பேசி ஆசிரியரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து குஜராத் சென்ற மும்பை போலீசார் சூரத்தில் வைத்து விஷாலை கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டார்.

Related Tags :
Next Story