கடலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை


கடலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 4 March 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள ஒட்டேரியில் மணல் குவாரி உள்ளது. இந்த குவாரி வருகிற 26-ந்தேதியுடன் மூடப்பட உள்ளது. இந்த நிலையில் மணல்குவாரியில் அனுமதிக்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாக பொதுப்பணித்துறைக்கு புகார்கள் சென்றன.

இதனால் கடந்த 2 நாட்களாக இந்த மணல் குவாரியில் மணல் அள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்து முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக சி.ஐ.டி.யு. மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகனுடன் பொதுப்பணித்துறை பொறியாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, முறைகேடுக்கு இடம் அளிக்காமல் மணல் அள்ளுவதாக நாங்கள் உறுதி அளித்ததன் பேரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒட்டேரி மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதிச்சீட்டு வழங்க பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்ததாக திருமுருகன் கூறினார்.

Next Story