மகளிர் மகிமை


மகளிர் மகிமை
x
தினத்தந்தி 4 March 2018 12:15 PM IST (Updated: 4 March 2018 12:02 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வருகிற 8-ந் தேதி முதல் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முழுக்க முழுக்க பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.

 சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தற்போது 2 பெண் பரிசோதகர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்ட இரண்டு ஆண் டிக்கெட் பரிசோதகர்களுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டவர்கள். அந்த பெண் பரிசோதகர்களின் செயல்பாடு பாராட்டும் விதத்திலும், ரெயில்வேக்கு கூடுதல் வருமானத்தையும் ஈட்டித்தரும் வகையிலும் அமைந்திருப்பதால் மகளிர் தினத்தில் பெண் பணியாளர்களை கவுரவப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் நடைபெற இருக்கிறது.

‘‘இரண்டு ஆண் டிக்கெட் பரிசோதகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக பரிசோதனை முறையில் இரண்டு பெண் பணியாளர்களை நியமித்தோம். அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. ஆண் டிக்கெட் பரிசோதகர்களை காட்டிலும் பயணிகளிடமிருந்து அபராதத்தொகையை இருமடங்கு அதிகமாக அவர்கள் வசூித்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் பெண் டிக்கெட் பரிசோதகர்களை கூடுதலாக நியமிக்க முடிவெடுத்துள்ளோம்’’ என்கிறார், ரெயில்வே அதிகாரி ஒருவர்.

தற்போது மும்பையில் இருந்து அகமதாபாத் செல்லும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 6 டிக்கெட் பரிசோதகர்களில் 2 பேர் பெண்கள். வருகிற மகளிர் தினத்தில் இருந்து 6 டிக்கெட் பரிசோதகர்கள் பணியையும் பெண்களே அலங்கரிக்கப் போகிறார்கள். இதுபற்றி பெண் பரிசோதகர் விஜிதா தேவன் கூறுகையில், ‘‘புறநகர் ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் பணியை செய்வது கடினமானது. பயணிகளில் சிலர் அபராதத் தொகையை செலுத்தாமல் வாக்குவாதம் செய்வார்கள். அவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு போராட வேண்டியிருக்கும். நீண்ட தூர ரெயில்களில் பணிபுரியும்போது பயணிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். அபராதத்தொகையை வசூலிப்பதிலும் சிரமம் இருக்காது’’ என்கிறார்.

Next Story