உஷாரய்யா உஷாரு..
அவள் நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு.
அவள் நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. அவள் பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில், தாயார் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அப்போது தம்பி ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். தாயாரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அவள் கல்லூரி படிப்பில் சேர்ந்தாள்.
அந்த காலகட்டத்தில் அவர்களது தூரத்து சொந்தத்தில் விதவைப் பெண் ஒருவர் இருந்தார். ஏழைக்குடும்பத்தை சேர்ந்த அவரை, இந்த கல்லூரி மாணவியின் தந்தைக்கு மறுமணம் செய்துவைத்தார்கள். தொடக்கத்தில் சித்திக்கும்- அவளுக்கும் நன்றாக பொருந்திப்போனாலும், காலப்போக்கில் அவ்வப்போது மோதிக்கொள்ளவும் செய்தார்கள்.
இந்த நிலையில் அவள் கல்லூரி படிப்பை முடித்தாள். வேலை தேடினாள். புனேயில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. தந்தை அவ்வளவு தூரத்திற்கு அவளை தனியே வேலைக்கு அனுப்ப தயங்கினார். ஆனால் அவளோ சித்தியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து, தந்தையிடம் பிடிவாதம் பிடித்து அனுமதி பெற்று கிளம்பிப்போனாள்.
அவள் விட்டால்போதும் என்று குடும்பத்தில் இருந்து பிரிந்து அங்கு சென்றுவிட்டாலும் அந்த ஊர், மொழி, வேலை, கலாசாரம் அனைத்துமே அவளுக்கு பெருங்குழப்பத்தைக்கொடுத்தது. வேலை கொடுத்த நிறுவனம் அவளுக்காக ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்திலும் இதர மொழி பேசும் பெண்களே இருந்தனர். அடுத்து என்ன செய்வது என்று அவள் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில், நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி அவளுக்கு அறிமுகமானாள். அந்த பெண்மணி இவள் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் சாதாரண ஊழியராக வேலைபார்த்தாள். அவள், இவளது தாய்மொழியில் சரளமாக பேசினாள். வேறு சில மொழிகளிலும் அசத்தினாள்.
‘நீ ரொம்ப குழப்பமாக காணப்படுகிறாய். மொழி புரியாமல் தவிக்கிறாய். நானும் குடும்பத்தை பிரிந்துதான் இங்கே தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். நடுத்தர வயதாகிவிட்டாலும் நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் தனியாக இருப்பதால், நீயும் என்னோடு வந்து தங்கிக்கொள். உனக்கு தேவையான அனைத்தையும் நான் செய்து தருகிறேன்’ என்றாள்.
அந்த பெண்ணின் பேச்சு இவளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த பெண்ணின் அறையில் போய் தங்கினாள். அவள், இவளை நன்றாக கவனித்துக்கொண்டாள். சுவையாக சமைத்தும்கொடுத்தாள். இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஏற்பட்டுவிட்டது.
அந்த பெண்ணை சந்திக்க, இளைஞன் ஒருவன் அடிக்கடி வீட்டிற்கு வருவான். அவனை தனது தூரத்து உறவினர் என்று இவளுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். அவனுக்கும் திருமணமாகவில்லை. அவன் அடிக்கடி வந்தாலும், இவளுக்கு தெரிந்து ஒரு நாளும் அந்த வீட்டில் இரவு நேரங்களில் தங்கியதில்லை. வந்து, சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு சென்றுவிடுவான். பார்க்க அழகாக இருப்பான். அவன், இவளிடமும் நட்பு பாராட்டினான்.
இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், ஊரில் இவளது சித்திக்கும்- தம்பிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அதனால் அவ்வப்போது வீட்டில் இருந்து தம்பி அழுது கொண்டே இவளுக்கு போன் செய்வான். குறிப்பாக இவள் விடுமுறையில் இருக்கும் வார இறுதி நாட்களில் போனில் தம்பி அடிக்கடி பேசி அழுவான். தம்பியின் நிலையை நினைத்து இவளும் கலங்கி கண்ணீர் சிந்துவாள். அதை பார்க்கும் அந்த பெண், இவளுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில் இவளை வெளியே அழைத்துச்செல்வாள். அப்போது அந்த இளைஞனும் உடன்செல்வான். அப்படியே அவன் கொஞ்சம் கொஞ்சமாக இவளுடன் நெருங்க ஆரம்பித்தான்.
இவள் மிகுந்த மனக்கவலையோடு இருக்கும் நாட்களில் அந்த பெண், இளைஞனுக்கு ரகசியமாக போன் செய்து, ‘அவள் கவலையோடு இருக்கிறாள். நீ இப்போது வந்து, ஆறுதலாகப் பேசி அவளை தனியாக வெளியே அழைத்துச்செல்’ என்று கூறுவாள். அவனும் உடனே தானாகவே வந்ததுபோல் காட்டிக்கொண்டு இவளுக்கு ஆறுதல் சொல்வான். பின்பு ‘வெளியே போய் வருவோம். உன் மனது ஆறுதல் அடையும்’ என்று அழைத்துச் சென்றுவிடுவான். இப்படியே அவர் களது நெருக்கம் அதிகமானது. காலப்போக்கில் அவன், இவளது பலவீனங்களை பயன்படுத்தி, போதை பழக்கத்திற்கும் உள்ளாக்கிவிட்டான். போதையோடு இருக்கும் நேரத்தில், அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுவதற்கான வாய்ப்புகளை அந்த பெண்ணே உருவாக்கிக்கொடுத்தாள். அவள் எதிர்பார்த்தபடி இருவரும் உடல் தொடர்பிலும் ஈடுபட்டுவிட்டார்கள்.
திடீரென்று ஒருநாள் உள்ளுணர்வு இவளை எச்சரித்தது. திட்டமிட்டு அவள், அந்த இளைஞனை பயன்படுத்தி தன்னை தவறான வழிக்கு கொண்டு செல்வதை உணர்ந்தாள். அதுபற்றி அவளிடம் பேச நினைத்தபோது எதிர்பாராதவிதமாக அவளது செல்போன் இவளது கைக்கு வந்தது. அதை துழாவிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். இளைஞனும்- அந்த பெண்ணும் அதில் நிர்வாணகோலத்தில் இருந்தார்கள்.
அதற்கு மேலும் அங்கு இருந்தால் தன்னை ஆபத்தான சூழலுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்த அவள், உடனடியாக விமானத்தில் கிளம்பி வரும்படி தன் தந்தையை அழைத்தாள். அவரும் வர, அந்த பெண்ணிடம் எந்த தகவலும் சொல்லாமல் தனது பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிவந்துவிட்டாள்.
மகளின் திடீர் வரவிற்கான காரணம் தெரியாத தந்தை திகைத்துப்போய் அவளுக்கு உள்ளூரில் வரன்தேடிக்கொண்டிருக்கிறார்!
வெளியூரில் தங்கியிருந்து வேலைபார்த்துக்கொண்டிருக்கும் பெண்கள், ஆண்களிடம் மட்டுமல்ல, இது போன்ற பெண்களிடமும் கவனமாக இருக்கவேண்டும்..!
- உஷாரு வரும்.

Related Tags :
Next Story