கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தைப்புலி: பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைப்புலி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் கடும் வறட்சி நிலவுகிறது. மேலும் புற்கள், செடி, கொடிகள் காய்ந்து விட்டதால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செம்மனாரை கிராம பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற மகாலிங்கம் என்பவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொத்தமுக்கை கிராம பகுதியில் கரடி தாக்கி கணவன், மனைவி 2 பேரும் உயிரிழந்த சம்பவமும் நடைப்பெற்றுள்ளன.
இந்த நிலையில் கோத்தகிரி கிளப்ரோடு மற்றும் பெந்தட்டி பகுதியில் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள லாங்வுட் சோலையை ஒட்டி அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று இங்குள்ள குடியிருப்பு பகுதிகளை ஒட்டி உலா வருகிறது.
குறிப்பாக மாலை சுமார் 6 மணிக்கு கிளப்ரோடு பகுதியிலிருந்து மிளிதேன் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இதன் நடமாட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவிகளும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தைப்புலியால் உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் அதனை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் அல்லது கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து கோத்தகிரி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
லாங்வுட் சோலையில் தற்போது புலிகள் இருப்பதை உறுதி செய்துள்ளோம். புலிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்க்காக கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் லாங்வுட் சோலை வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது புலி மற்றும் சிறுத்தைப்புலி ஆகியவற்றின் இனப்பெருக்க காலமாக இருப்பதால் சிறுத்தைப்புலிகள் லாங்வுட் வனப்பகுதியிலிருந்து அடிக்கடி வெளியேறி வருகின்றன.
மேலும் சிறுத்தைப்புலி மிளிதேன் செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள பாறைகளில் சென்று வெயில் அடிக்கும் போது படுத்து கொள்கிறது. பின்னர் மாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் திரும்பி விடுகின்றன. அவற்றின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் சிறுத்தைப்புலியை கண்டால் அவற்றை தொந்தரவு செய்யக் கூடாது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தைப்புலியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story