குளத்தில் ‘டைவ்’ அடித்து குளித்த போது நீலகிரி ராணுவ வீரர் தலையில் அடிபட்டு சாவு
குளத்தில் ‘டைவ்’ அடித்து குளிக்கும் போது தலையில் அடிபட்டு நீலகிரி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கீழ்குந்தா கிராமத்தை சேர்ந்த சுரேஷின் மகன் நிதிஷ் (வயது 27). இவரது தந்தை இறந்து விட்டார். தாயார் விஜயா, சகோதரி சுவாதி ஆகியோர் உள்ளனர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது மும்பையில் உள்ள ராணுவ முகாமில் பணி புரிந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ராணுவ முகாமில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து நிதிஷ் மற்றும் சக வீரர்கள் அருகில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்று உள்ளனர்.
அப்போது நிதிஷ் குளத்தில் ‘டைவ்’ அடித்தார். இதில் அவரது தலை குளத்தில் உள்ள பாறையில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சக வீரர்கள் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல், அடக்கம் செய்வதற்காக விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கீழ்குந்தாவுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடைபெற்றது.
அங்கு ராணுவ கேப்டன் பிரதீப் குமார் தலைமையிலான ராணுவ வீரர்கள் நிதிஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story