காரணி கிராமத்தில் அரசு நிலங்களை கணக்கிடும் அதிகாரிகள்


காரணி கிராமத்தில் அரசு நிலங்களை கணக்கிடும் அதிகாரிகள்
x
தினத்தந்தி 5 March 2018 3:00 AM IST (Updated: 5 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

காரணி கிராமத்தில் அரசு நிலங்கள் கணக்கிடும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காரணி கிராமத்தில் அரசு நிலங்கள் உள்ளது. இதனை பல தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தமிழக அரசு நிதி ஒதுக்கியும் இந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியவில்லை.

ஆடு, மாடு மற்றும் கால்நடைகளை மேய்க்க இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை கண்டறிந்து அதனை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசின் நலத்திட்டங்களுக்கு கட்டிடங்கள் கட்ட இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் சார்பாக திருவள்ளூர் வருவாய் அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொன்னேரி ஆர்.டி.ஓ., கும்மிடிப்பூண்டி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கும்மிடிப்பூண்டி தாசில்தார், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், பூவலம்பேடு வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தனர். அரசு நிலத்தை அளந்து கற்கள் நடும் பணியை மேற்கொண்டனர்.

Next Story