கும்மிடிப்பூண்டி அருகே டிரைவரை தாக்கி, இரும்பு ஏற்றி வந்த லாரி கடத்தல்
கும்மிடிப்பூண்டி அருகே டிரைவரை தாக்கி இரும்பு ஏற்றி வந்த மினி லாரியை மர்மநபர்கள் கடத்திச்சென்றனர்.
கும்மிடிப்பூண்டி,
மன்னார்குடியை அடுத்த சித்திமல்லி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து காற்றாலைக் கான உதிரி பாகம் தயாரிப்பதற்காக வடிமைக்கப்பட்ட 3 டன் இரும்பு பொருட்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் கவரைப்பேட்டை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பண்பாக்கம் மேம்பாலம் வழியாக கும்மிடிப்பூண்டி நோக்கி அந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் லாரியை பின் தொடர்ந்து வந்த காரில் வந்தவர்கள் லாரிக்கு முன்னால் வேகமாக சென்று திடீரென லாரியை வழிமறித்து நிறுத்தினர். டிரைவர் மணிகண்டனும் லாரியை நிறுத்தினார்.
அப்போது அந்த காரில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். இதில் 2 பேர் மட்டும் காரை விட்டு கீழே இறங்கினர். அவர்களது கைகளில் வீச்சரிவாள் மற்றும் உருட்டுக்கட்டைகள் இருந்தன. முகத்தை அடையாளம் தெரியாதபடி மூடி இருந்த அவர்கள் டிரைவர் மணிகண்டனை வீச்சரிவாளால் மிரட்டி லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.
பின்னர் மணிகண்டனை அவர்கள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் நிலை குலைந்து மயங்கிய நிலைக்கு தள்ளப்பட்ட லாரி டிரைவர் மணிகண்டனின் செல்போனை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து இரும்பு பொருட்களுடன் கூடிய மினி லாரியை கடத்திச்சென்றனர்.
இது குறித்து கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்மநபர்களின் தாக்குதலால் படுகாயம் அடைந்த டிரைவர் மணிகண்டன் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Related Tags :
Next Story