ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்துகளில் சிக்கும் வாகனங்கள்
தாம்பரம் பெட்ரோல் பங்க் பகுதி சிக்னல் முதல் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் வரை ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் தினமும் ஏராளமான வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. இதை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம்,
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை புறநகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக ஜி.எஸ்.டி. சாலையில் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரை பள்ளம் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதற்காக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் ஜி.எஸ்.டி. சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டன. குழாய்கள் புதைக்கப்பட்ட இடத்தில் சிமெண்டு கலவை கொட்டி மூடப்பட்டது.
ஆனால் இதை முறையாக செய்யாமல் தரமற்ற நிலையில் செய்ததால் கடந்த பல மாதங்களாக இந்த சிமெண்டு கலவைகள் பெயர்ந்து, ஜி.எஸ்.டி. சாலையின் நடுவே குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தாம்பரம் பெட்ரோல் பங்க் பகுதி சிக்னலில் இருந்து தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் வரை உள்ள பகுதியில் சாலையின் பெரும்பாலான இடங்களில் பள்ளம் ஏற்பட்டும், சிமெண்டு கலவைகள் பெயர்ந்தும் உள்ளது.
இதனால் இந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். தினமும் அவர்கள் விபத்துகளில் சிக்கி, காயமடைகின்றனர். கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் வேகமாக செல்லும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்குகிறது.
இந்த பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் இந்த சாலையில் உள்ள பள்ளங்களால் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி, பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மிக முக்கிய போக்குவரத்து சாலையான ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங் களை நெடுஞ்சாலைதுறையினர் உடனே சீரமைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது.
தாம்பரம் பெட்ரோல் பங்கில் இருந்து சானடோரியம் மெப்ஸ் சிக்னல் வரை ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பலர் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வரும் பெண்கள்தான், தினமும் சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்தில் சிக்குகின்றனர்.
சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஏற்பட்டுள்ள இந்த சேதத்தை ஒரே நாளில் சீரமைக்க நெடுஞ்சாலை துறையினரால் முடியும். ஆனால் தினமும் விபத்துகள் ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்கும் நிலைதான் உள்ளது. பெரும் விபத்துகள் ஏற்பட்டு அநியாய உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பள்ளங்களை மூடி சீரமைத்து, முழுமையாக தார் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story