வடமாநில சட்டசபை தேர்தலில் வெற்றி: பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


வடமாநில சட்டசபை தேர்தலில் வெற்றி: பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பா.ஜனதாவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஓசூர்,

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரிபுரா மாநிலத்தில் தனி மெஜாரிட்டி பெற்று பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. நாகலாந்து மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா சார்பில் ஓசூரில் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா தலைவர் முனிராஜூ தலைமை தாங்கினார். கோட்டப்பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது கட்சியையும் மற்றும் பிரதமர் மோடியையும் வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், மாவட்ட துணைத்தலைவர் போத்திராஜ், ஓசூர் நகர இளைஞரணி செயலாளர் விருபாக்‌ஷா, நகர துணைத்தலைவர் சதீஷ், பொதுச்செயலாளர் தங்கராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

அதே போல தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதாவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதற்கு நகர தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், வெங்கட்ராஜ், இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரபு, புட்டுராஜ், கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story