புதுக்கோட்டையில் 123 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
புதுக்கோட்டையில் நடந்த விழாவில் 123 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டரை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 123 பெண்களுக்கு ஸ்கூட்டரை வழங்கி பேசினார். இதில் புதுக்கோட்டை அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர், அரிமளம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திலகர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வதுபிறந்த நாளினை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், வன சரக அலுவலர்கள் சதாசிவம், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story