கரூரில் 100 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் பாராளுமன்ற துணை சபாநாயகர், அமைச்சர் வழங்கினர்
கரூரில் 100 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டரை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.
கரூர்,
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் அறிவிப்பான, பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்டத்திலும் அம்மா ஸ்கூட்டருக்காக பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு செய்யப்பட்டன.
இதில் முதல் கட்டமாக 100 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர்களை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “பணியிடங்களுக்கு செல்லும் பெண்களுக்கு உதவிடும் வகையில் வாகனத்தின் பாதி விலை அல்லது ரூ.25,000 இதில் எதுகுறைவோ அதனை ஒரு லட்சம் பெண்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,535 பெண்களுக்கு வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதல் கட்டமாக 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதனை பெறும் பெண்கள் சாலைவிதிகளை பின்பற்றி அரசின் நோக்கமறிந்து பயன்படுத்திட வேண்டும்” என்றார்.
விழாவில் கீதா எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் பாலகணேஷ், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story