ஊதிய உயர்வு வழங்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் பேட்டி
ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஒத்துக் கொண்டபடி பதிவுறு எழுத்தருக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வினை வழங்காவிட்டால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். பிரதமர் வீடு கட்டும் திட்ட செயல்பாட்டில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு கடும் நெருக்கடி கொடுக்கிறது. பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் நிதியில் 60 சதவீதம் பொருட்களாகவும், 40 சதவீதம் பணமாகவும் வழங்கப்படுகிறது. பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்டு, இரும்புக்கம்பி ஆகியவற்றை அரசே இன்னும் வழங்காத நிலையிலும், மணல் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும் வீடு கட்டுவதற்கான 2-வது தவணை பணத்தை வழங்குமாறு அரசு நெருக்கடி கொடுக்கிறது. இதனால் இந்த திட்டத்தின் முறைகேடு நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
கிராமப்புறங்களில் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. வீடுகளில் கழிப்பறை கட்ட இடமில்லாத நிலையிலும், கழிப்பறை கட்டுவதற்கான உரிய மதிப்பீடு இல்லாமல் குறைவான நிதி வழங்கப்படுவதாலும் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு பயனாளிகள் வர தயங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் இத்திட்ட செயல்பாட்டிலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனை கண்டித்து வருகிற 7-ந்தேதி அனைத்து யூனியன் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 ஊராட்சி செயலர்கள் உள்ளனர். இவர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கான ஊதியம் வழங்குவதாக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதற்கான அரசு ஆணை வெளியிடப்படவில்லை. வரும் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அறிவிப்பு வெளியாகாத பட்சத்தில் வருகிற 16-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) கடைசி வாரத்தில் காலவறையற்ற வேலை நிறுத்தம் தொடங்கப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு அலுவலர் சங்க கட்டிடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story