பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம், அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம், அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 March 2018 3:45 AM IST (Updated: 5 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உழைக்கும் பெண்களுக்கு தமிழக அரசின் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் இளங்கோ வரவேற்று பேசினார். விழாவில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் 100 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள், 33 மாற்றதிறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள்கள், 410 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் திருமண உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நல்ல திட்டங்களை மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி உள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு வழங்கிய உதவித் தொகையை தற்போதைய முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்த்தி வழங்கி உள்ளார். அத்துடன் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் தற்போதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story