லாரி மீது கார் மோதல்: ஜவுளிக்கடை அதிபர் உள்பட 2 பேர் பலி
கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கொட்டாம்பட்டி,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கணபதி சுந்தரம் மகன் மணிகண்டன் (வயது 33). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நெல்லையில் ஒரு புதிய ஜவுளிக்கடையை திறக்க ஏற்பாடு செய்து, அதற்காக நேற்றுமுன்தினம் இரவு ஒரு காரில் ஜவுளிகளை ஏற்றிக் கொண்டு, கடையில் வேலை செய்யும் ராஜூ (30) என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். காரை ராஜூ ஓட்டி சென்றார்.
நேற்று அதிகாலை கொட்டாம்பட்டி அருகில் உள்ள கருங்காலக்குடி 4 வழிச்சாலையில் திருச்சுனை விலக்கு என்ற இடத்தில் வந்த போது, கடலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்டு மூடைகள் ஏற்றிக் கொண்டு ராஜபாளைத்திற்கு சென்ற லாரியின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது.
அதில் லாரிக்குள் கார் புகுந்து சிக்கி சின்னாபின்னமாகியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன், ராஜூ ஆகியோர் பலியாகினர்.
தகவலறிந்து வந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி, தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலை பாதுகாப்பு துறையினர் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் போராடி காரின் இடிபாடுகளில் சிக்கி கிடந்த 2 பேரின் உடலை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story