பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூண்களின் உறுதித்தன்மையை என்ஜினீயர்கள் ஆய்வு
புதிய தூக்குப் பாலம் கட்டப்பட உள்ள நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூண்களின் உறுதித்தன்மையை என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாலத்தின் மைய பகுதியில் கப்பல்களும் செல்லும் வகையில் தூக்குப்பாலம் வடிவமைத்து கட்டப்பட்டு உள்ளது. இந்த தூக்குபாலம் மனித கரங்களால் திறந்து மூடப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து ரெயில் பாலத்தின் மைய பகுதியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் கட்டுவதற்கு ரெயில்வே துறை முடிவு செய்து, அதற்கான நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள நிறுவனத்தின் வடிவமைப்பு என்ஜினீயர்கள் குழுவினர் பாலத்தின் மைய பகுதியில் தூண்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். வடிவமைப்பு திட்ட பொறியாளர் சந்தன்சிவ் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் கடலில் உள்ள தூண்களின் உறுதி தன்மை, தூணின் அகலம் அதன் சுற்றளவு, கடலின் அடியில் இருந்து மேல் பகுதி வரை உள்ள தூணின் மொத்த உயரம் மற்றும் ரெயில்கள் செல்லும்போது மையபகுதியில் உள்ள தூண்களில் அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பதை அதி நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியல் உள்ள பழமையான தூக்குப் பாலத்தை அகற்றி ரூ.35 கோடி நிதியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப் பாலம் கட்டப் பட உள்ளது.புதிய தூக்குப் பாலத்தின் பணிகள் வருகிற ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய தூக்குப் பாலம் பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்து 3 மாதத்திற்கு பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படும். ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தோடு நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படும்.
100 ஆண்டுகளை கடந்து கடலுக்குள் உள்ள பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூண்கள் உப்பு நீரால் , கடல் அலைகளின் வேகத்தாலும் ஏதேனும் பாதிப்படைந்து உள்ளதா, அதன் உறுதித்தன்மை குறித்தும் மும்பை என்ஜினீயர்கள் குழுவினர் இந்த ஆய்வை நடத்தி வருகின்றனர். இன்னும் 2 நாட்களுக்குள் இந்த ஆய்வு முழுமையாக முடிவடையும். அதன்பின்னர் ஆய்வு அறிக்கை அனுப்பப்படும். அதன் அடிப்படையில் புதிதாக தூண்கள் அமைக்க வேண்டுமா என்பது பற்றி ரெயில்வே ஆணையம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story