மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவருடைய மகன் அன்பரசன் (வயது 22). கடந்த 2-ந்தேதி, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், எல்லையப்பன், மணியன், லட்சுமணன், செல்லதுறை, அஞ்சப்பன் உள்ளிட்ட 12 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றார்.
அவர்கள் வேதாரண்யத்தை அடுத்த கோடியக் கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் நின்றிருந்த அன்பரசன் திடீரென நிலைதடுமாறி கடலில் விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள், உடனடியாக கடலில் குதித்து அன்பரனை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் கரை திரும்பினார்கள்.
இதுகுறித்து கடலோர காவல் நிலையம் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். மறுநாள் காலையில் அன்பரசன் விழுந்த இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீன்பிடிக்கும் வலை விரித்து மீனவர்கள் மீண்டும் தேடிப்பார்த்தனர். 11 மணி நேர தீவிர தேடுதலுக்கு பிறகு மீனவர்களின் வலையில் இறந்த நிலையில் அன்பரசன் உடல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு அன்பரசன் உடலை மீனவர்கள் நேற்று கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த நிரவி போலீசார் அங்கு வந்து அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டுச்சேரி மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூறுகையில், ‘கடலில் மீன் பிடித்துகொண்டிருந்தபோது மீனவர் அன்பரசன் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டார். இதுபோன்ற சம்பவம் தற்போது அடிக்கடி நடக்கிறது. கடலில் மீன்வரத்து இல்லாமல் மீனவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
மீன்களை தேடி செல்லும்போது தான், இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி வந்ததாக கைது செய்கின்றனர். இப்படி மிகுந்த வேதனையில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் இறந்த மீனவர் அன்பரசன் குடும்பத்தினருக்கு, புதுச்சேரி அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story