திரிபுராவில் பா.ஜனதா ஆட்சி: பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரங்கசாமி வாழ்த்து


திரிபுராவில் பா.ஜனதா ஆட்சி: பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரங்கசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 5 March 2018 5:30 AM IST (Updated: 5 March 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

திரிபுரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாரதீய ஜனதா வெற்றியை தொடர்ந்து பிரதமருக்கு ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப்பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி பாரதீய ஜனதா கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் புதுச்சேரி வந்த பிரதமர் நரேந்திர மோடியை அவர் விமான நிலையம் சென்று வரவேற்றார். லாஸ்பேட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரங்கசாமி முதல் வரிசையில் அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்டார்.

இந்தநிலையில் 3 வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் பா.ஜ.க. வெற்றிபெற்றதையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி பெற்ற வெற்றிகளை தொடர்ந்து தற்போது திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கம் மனதாரா பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த வெற்றிக்கு வழிவகுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவருக்கு துணையாக நிற்கும் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் ரங்கசாமி கூறியுள்ளார்.

Next Story