வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மாசி மக திருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாநாட்களில் சாமி, ரிஷபம், பூதம், யானை, அன்னபட்சி, இந்திரவிமானம் உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நடைபெற்றது. முன்னதாக கல்யாண சுந்தரர், மீனாட்சி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து கோவில் அருகே உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் தெப்பம் 3 முறை வலம் வந்தது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தவைலர் தென்னரசு, மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் குணசேகரன், கோவில் செயல் அலுவலர் ராமநாதன், யாழ்ப்பாணம் வரனிஆதீனம் செவ்வந்திநாத பண்டாரசந்நதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியாக இருப்பது வீட்டிலா? வெளியிலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. வர்த்தக சங்கத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story