வெளிநாடுகளில் இருந்து மங்களூருவை சுற்றிப்பார்க்க 2 சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்


வெளிநாடுகளில் இருந்து மங்களூருவை சுற்றிப்பார்க்க 2 சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 5 March 2018 4:00 AM IST (Updated: 5 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து மங்களூருவை சுற்றிப்பார்க்க 2 சொகுசு கப்பல்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

மங்களூரு,

வெளிநாடுகளில் இருந்து மங்களூருவை சுற்றிப்பார்க்க 2 சொகுசு கப்பல்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

மங்களூருவுக்கு வந்த சொகுசு கப்பல்கள்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு 2 நவீன வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள் வந்தன. அந்த கப்பல்களின் பெயர்கள் எம்.வி.கோஸ்டா விக்டோரியா, எம்.வி. இன்சிக்னியா ஆகும். இந்த கப்பல்களில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மன், கொழும்பு ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மங்களூருவில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க வருகை தந்து இருந்தார்கள்.

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்த எம்.வி.கோஸ்டா விக்டோரியா கப்பலில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளை சேர்ந்த 1771 சுற்றுலா பயணிகளும், 809 ஊழியர்களும் வருகை தந்து இருந்தார்கள்.

கொழும்புவில் இருந்து புறப்பட்ட எம்.வி.இன்சிக்னியா கப்பலில் 612 சுற்றுலா பயணிகளும், 407 ஊழியர்களும் வந்து இருந்தார்கள். அவர்கள் மங்களூருவில் உள்ள முக்கிய கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முந்திரி பருப்பு தயாரிக்கும் தொழிற்சாலை, உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்தனர்.

20 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள்

அதன்பின்னர் மாலை 6 மணியளவில் மீண்டும் துறைமுகத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளும், ஊழியர்களும் கப்பலில் புறப்பட்டு சாலலாவுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

இதுகுறித்து மங்களூரு துறைமுக அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமெரிக்கா, கொழும்புவில் இருந்து புறப்பட்டு மங்களூருவுக்கு வந்த 2 சொகுசு கப்பல்களில் 2,383 சுற்றுலா பயணிகளும், 1,216 ஊழியர்கள் வருகை தந்தார்கள். அவர் மங்களூருவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு மாலையில் கப்பல்கள் மூலம் சாலலாவுக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

2017-2018 ம் ஆண்டுகளில் மங்களூருவுக்கு சுற்றுலா பயணிகளுடன் இதுவரை 18 கப்பல்கள் வந்து உள்ளன. தற்போது வந்து சென்ற கப்பல்கள் 19 மற்றும் 20-வது கப்பல்கள் ஆகும். 20 கப்பல்களில் இதுவரை 20 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் மங்களூருவுக்கு சுற்றுலா வந்து சென்று உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story