நாலச்சோப்ராவில் 7 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை


நாலச்சோப்ராவில் 7 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 March 2018 4:00 AM IST (Updated: 5 March 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

நாலச்சோப்ராவில் 7 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து சிறுமி பலியானாள். அவள் தற்கொலை செய்துகொண்டாளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை,

நாலச்சோப்ராவில் 7 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து சிறுமி பலியானாள். அவள் தற்கொலை செய்துகொண்டாளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி பலி

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா துலிஞ் பகுதியை சேர்ந்த சிறுமி கிரண் (வயது14). இவள் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்றாள். இந்தநிலையில் வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர் சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நாலச்சோப்ரா பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வரும் 7 மாடி கட்டிடத்தில் இருந்து சிறுமி ஒருவள் விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

போலீஸ் விசாரணை

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தது காணாமல் போன சிறுமி கிரண் என்பது தெரியவந்தது. கட்டிடத்தின் மொட்டை மாடியில் கிரணின் செருப்பு கிடந்தது.

சிறுமி தற்கொலை செய்தாளா? அல்லது தவறி விழுந்து இறந்தாளா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story