‘செட்’ தேர்வை 3,378 பேர் எழுதினார்கள்
வேலூர் மாவட்டத்தில் நடந்த செட் தேர்வை 3 ஆயிரத்து 378 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர்,
செட் தேர்வுதமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கு மாநில அளவில் ஆண்டு தோறும் செட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு முதுகலை பட்டப்பிரிவில் 55 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, இந்தாண்டு செட் தேர்வுக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி முதல் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், கடைசி தேதி பிப்ரவரி 9-ந் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தாண்டு செட் தேர்வை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் வேலூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர் உள்பட 11 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, ஊரீசு கல்லூரி, டி.கே.எம். மகளிர் கல்லூரி, காட்பாடி அக்சீலியம் கல்லூரி என 4 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 597 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
நேற்று காலை நடந்த இத்தேர்வில் 3 ஆயிரத்து 378 பேர் கலந்து கொண்டு, 21 பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதினார்கள். 219 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில், பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் கூறிய பதில்களை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் நடந்த தேர்வை வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story