ரசாயன வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் மனு
கோவை சின்ன வேடம்பட்டியில் ரசாயன வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ரசாயன வாயு வெளியே வருகிறது. இதன்காரணமாக சின்னவேடம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், சுவாச கோளாறு, கண் பார்வை பாதிப்பு, இதய நோய் உள்ளிட்டவையும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும், நடவடிக்கை எதுவும் இல்லை. எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் அளித்த மனுவில், கைத்தறி நெசவாளர்களுக்கு அமைப்பு சாரா நல வாரியம் மூலம் ஒரு ஆண்டாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கோரும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
சக்திசேனா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசனார் தலைமையில் அதன் நிர்வாகிகள் அளித்த மனுவில், தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை உள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இதற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. எனவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரும் ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கோவை மாவட்ட பொது ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் இலவச அமரர் ஊர்தி மற்றும் தாய்சேய் நல ஊர்தி வாகனங்களில் 14 டிரைவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பணி நேரம் வரைமுறை செய்யப்படவில்லை. ஒரே வாகனத்தில் சடலங்களை எடுத்து செல்வதால் பொதுமக்களுக்கும், டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
தற்போது இவர்களை பணியில் நியமித்து இருக்கும் நிறுவனம் ஒருவரை பணி நீக்கம் செய்து உள்ளது. எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அமைப்பு இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உள்ளது.

Related Tags :
Next Story