ஒரு கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம்: குடிநீர் கிணறு அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மனு
ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளதால், குடிநீர் கிணறு அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். இதில், கீழ்கோத்தகிரி தென்றல் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கீழ்கோத்தகிரி தென்றல்நகர் பகுதிக்கு பிக்கட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இங்கு இரு கிராமங்களுக்கும் பயன்படும் பகுதியில் பொது கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 25 நாட்களாக தென்றல் நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் பிக்கட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து தலை சுமையாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. அங்கும் 3 குடங்களுக்கு மேல் தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே, தென்றல் நகரில் புதிதாக குடிநீர் கிணறு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பைக்காரா கிராம மக்கள் கொடுத்த மனுவில், பைக்காரா கிராமத்திற்கு மின்சார வாரியம் மூலம் பைக்காரா அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1-ந் தேதி எந்தவித முன்னறிப்பும் இன்றி, கிராமத்துக்கு வரும் குடிநீர் குழாய் அடைத்து சீல் வைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே மின்வாரிய குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லிபாக்கம், புழம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ள தாவது:-
மச்சிக்கொல்லிபாக்கம் முதல் புழம்பட்டி வரை உள்ள 1½ கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை சீரமைக்கப்பட்டது. ஆதிவாசி பனியர் காலனிக்கு செல்லும் இந்த சாலையை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் தற்போது அந்த சாலை குண்டும்குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடிய வில்லை. சாலை மோசமாக இருப்பதால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஒரு அரசு பஸ் நிறுத்தப்பட் டது. பொதுமக்கள் சாலையில் மண், கல் நிரப்பி செப்பனிட்டதால் அந்த அரசு பஸ் மீண்டும் இயக்கப் படுகிறது. மழை காலத்தில் அந்த சாலை மேலும் பழுதடையும் நிலை உள்ளது. எனவே, நிதி ஒதுக்கி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 163 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story