மகளிர் தின விழாவில் நடிகை வரலட்சுமி பங்கேற்பு
வியாசர்பாடியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை வரலட்சுமி பங்கேற்பு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பூர்,
உலகம் முழுவதும், மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை பெரம்பூரை அடுத்த வியாசர்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ‘உலக மகளிர் தின விழா’ கொண்டாடப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்பட பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக அங்கு அவர் ரத்த தான முகாமை தொடங்கிவைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். பின்னர் அந்த ரத்தம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story