வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
துரைப்பாக்கத்தில் வழிப்பறியில் ஈடுப்பட்ட 2 வடமாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கணேசனை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
உடனே கணேசன் ‘திருடன், திருடன்’ என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களில் ஒருவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவரிடம் பொதுமக்கள் நீ யார்? எந்த ஊரை சேர்ந்த சேர்ந்தவன்? உன் கூட்டாளிகள் யார்? என சரிமாரியாக கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். அப்போது அவர், தனது பெயர் பிசால்சுவாப்(20) என்றும் தான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார்.
மேலும், தானும் பீகாரை சேர்ந்த கூட்டாளிகள் 7 பேரும், காரப்பாக்கத்தில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து கடந்த 3 மாதங்களாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் பிசால்சுவாப்பை அழைத்து கொண்டு காரப்பாக்கத்துக்கு சென்றனர். அங்கு இருந்த பீகாரை சேர்ந்த ஹர்பன்ராய்(22) என்பவரை பிடித்த பொதுமக்கள் அவருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் கண்ணகி நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story