ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தறிப்பட்டறை உரிமையாளரை கண்டித்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
தறிப்பட்டறை உரிமையாளரை கண்டித்து ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த அனைவரையும் நுழைவு வாயிலில் வைத்து போலீசார் சோதனை நடத்தினார்கள். மதியம் 1.30 மணி அளவில் ஒருவர் கையில் பையுடன் மனு கொடுக்க வந்தார். நுழைவு வாயிலில் போலீசார் சோதனை நடத்துவதை பார்த்த அந்த நபர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு பையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். பின்னர் தீக்குளிப்பதற்காக தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றினார்.
இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள். மேலும் அவர் மீது தண்ணீரையும் ஊற்றினார்கள். இதைத்தொடர்ந்து அவரை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், ‘அவர் சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரியானூரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 37). தறிப்பட்டறை தொழிலாளி என்பது தெரிய வந்தது. மேலும் இவர் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அந்த தறிப்பட்டறையின் உரிமையாளரிடம் ரூ.90 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதற்கான கடனை அவருடைய சம்பளத்தில் இருந்து தறிப்பட்டறை உரிமையாளர் பிடித்து வந்து உள்ளார். இந்த நிலையில் கன்னியப்பன், வட்டி மட்டுமே செலுத்தி இருப்பதாகவும், ரூ.90 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் அந்த தறிப்பட்டறை உரிமையாளர் கூறியதாக தெரிகிறது. மேலும், பணத்தை உடனடியாக செலுத்தும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கன்னியப்பன் அங்கிருந்து வெளியேறி ஈரோட்டில் தலைமறைவாக இருந்து உள்ளார். இந்த நிலையில் அவர் தறிப்பட்டறை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றது,’ தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story